மீண்டு வந்த விஷ்ணு விஷால்!

தினமலர்  தினமலர்
மீண்டு வந்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால், வெளியிட்டு உள்ள மனம் திறந்த கடிதம், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: திரையுலகில் ஏற்பட்ட தோல்வி, விபத்து, விவாகரத்து ஆகியவற்றால் மனம் உடைந்து, இரண்டு ஆண்டுகளாக, மதுவுக்கு அடிமையானேன். இது என் குடும்பத்தினரை, எந்த அளவுக்கு பாதித்தது என்பதைக்கூட நான் அறியவில்லை.

நல்லவேளையாக உரிய சிகிச்சை மற்றும் முறையான பயிற்சிகளால், மதுவில் இருந்து மீண்டேன். மீண்டும் பயிற்சி செய்து, 'சிக்ஸ்பேக்' வைத்தேன். இனி உற்சாகமாக நடிப்பேன்.இவ்வாறு அதில் தெரிவித்துஉள்ளார்.

மூலக்கதை