நடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்

தினகரன்  தினகரன்
நடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்

கொழும்பு: ‘‘நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்படவில்லை. அவருக்கு விசா மறுக்கப்பட்டதாக வந்த செய்திகள் வெறும் வதந்தி’’ என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்ததாகவும், ஆனால், நடிகர் ரஜினிக்கு இலங்கை அரசு விசா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் ராஜபக்சே மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் மூத்த நடிகர் ரஜினிகாந்த், இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகள், வெறும் வதந்தி. நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. இலங்கையில் நடிகர் ரஜினிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதில் நானும், எனது தந்தையும் கூட அடங்குவோம். ரஜினிகாந்த் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், அதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

மூலக்கதை