கமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி டெஹ்ரானில் நேற்று முன்தினம் உரையாற்றிய போது, `இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி அரசாங்கங்கள் அமெரிக்காவின் எடுபிடிகள்’ என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றைய தனது டிவிட்டரில், ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் அண்மையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குறித்து சில மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய அருவெறுக்கத்தக்க பேச்சில், `இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்’ என்று அநாகரீகமாக தாக்கி பேசியுள்ளார். ஏற்கனவே, அவர்களுடைய நாட்டின் பொருளாதாரம் செயலிழந்து உள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை