பிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை

தினகரன்  தினகரன்
பிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை

பினன்: பிலிப்பைன்ஸ் எரிமலையில் இருந்து வெளியான சாம்பலுடன், பிளாஸ்டிக் கழிவு கலந்து செங்கல் தயாரிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ‘டால்’ எரிமலை ஒரு வாரத்துக்கு முன்பு வெடித்து சிதறியது. இதிலிருந்து எரிமலை குழம்பும், சாம்பலும் அதிகளவில் வெளியேறியது. இதனால், பினன் நகரில் 15 கி.மீ தூரத்துக்கு எரிமலை சாம்பல் படிந்துள்ளது. இதனால், இப்பகுதியிலிருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். எரிமலை சாம்பலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு, இதை பயனுள்ள வகையில் பயன்படுத்த அருமையான யோசனை கிடைத்தது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளும் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. எரிமலை சாம்பலுடன், பிளாஸ்டிக் கழிவு, மணல், சிமென்ட் கலந்து செங்கல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் செங்கல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த செங்கற்களை உள்ளூரில் வீடு கட்டும் திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீணாகப் போகும் எரிமலை சாம்பலையும் பயன்படுத்தி, முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கின்றனர் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள்.  

மூலக்கதை