மல்லி மூட்டைக்கு ரூ.200 சரிவு

தினகரன்  தினகரன்
மல்லி மூட்டைக்கு ரூ.200 சரிவு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் ராஜஸ்தானில் இருந்து லைன் மல்லி வரத்து அதிகரிப்பால், மூட்டைக்கு ரூ.200 விலை குறைந்து விற்பனையானது. ஆனால், வத்தல், எண்ணெய், பருப்பு விலைகள் உச்சத்தில் உள்ளன. விருதுநகர் மார்க்கெட்டில் நாடு மல்லி வரத்து குறைவால், மூட்டை ரூ.3,800க்கு விற்பனையான நிலையில், ராஜஸ்தானில் இருந்து வந்த லைன் மல்லி (40 கிலோ) மூட்டை ரூ.3,000க்கு விற்பனையானது. இந்நிலையில், வரத்து அதிகரிப்பால் லைன் மல்லி மூட்டைக்கு ரூ.200 விலை குறைந்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் ரூ.3,000க்கு விற்பனையான லைன் மல்லி மூட்டை இந்த வாரம் ரூ.2,800க்கு விற்பனையானது. மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறையால் அனைத்து பொருட்களின் விலைகளும் கடந்த வார விலை நிலவரத்திலேயே உள்ளன.

மூலக்கதை