முகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்!

தினகரன்  தினகரன்
முகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்!

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 17 வயதான லாரா சான்சன் என்ற இளம் பெண் தனது நண்பர் வளர்க்கும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த நாய் ஒன்றுடன் முகத்துடன் முகம் வைத்து புகைப்படம் எடுக்க முயன்றார்.  அப்பொழுது கோபம் அடைந்த நாய் லாராவை கடித்து குதறிவுள்ளது. உடனே லாராவை நாயிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் லாராவின் முகத்தில் 40 தையல் போடப்பட்டுள்ளது. இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், லாரா நாய்க்கு மிகுந்த கோவம் வரும் செயலை செய்திருப்பார்.  அதனால்தான் நாய் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும், நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், நாய் தன்னை கடிக்கும் புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாரா.

மூலக்கதை