தலைவி படத்தில் இணைந்த சமுத்திரக்கனி

தினமலர்  தினமலர்
தலைவி படத்தில் இணைந்த சமுத்திரக்கனி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, தலைவி என பெயரிட்டு, படமாக எடுத்து வருகின்றனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில், ஜெயலலிதாவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் படம் தயாராகிறது. படம், ஜூன் 26ல் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். சில தினங்களுக்கு முன், இப்படத்துக்கான டீசர் வெளியானது. அதில், எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமியின் புகைப்படமும் இடம் பெற்றது. இதையடுத்து, அரவிந்த் சாமிக்கு, எம்.ஜி.ஆர்., வேடம் சரியாக பொருந்தி இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தலைவி படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், அவருக்கு படத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் கேரக்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை