நடிகைக்கு கவர்ச்சி மட்டும் போதாது: ஹூமா குரேஷி

தினமலர்  தினமலர்
நடிகைக்கு கவர்ச்சி மட்டும் போதாது: ஹூமா குரேஷி

கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் மட்டும், சினிமா வாய்ப்புகள் கிடைத்து விடாது. திறமை இருந்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், நடிகைகள் கவர்ச்சிக்கு மட்டுமல்ல; கதைக்கும் முக்கியம் என்ற கருத்து பரவி வருகிறது. கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கஷ்டப்பட கதாநாயகிகள் தயாராகி இருக்கிறார்கள். உழைப்புக்கு, சினிமாவில் நல்ல பலனும் கிடைக்கிறது. நான் சினிமாவில் நடிக்க குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ஆனாலும் உறுதியாக இருந்து நடிகையானேன்.

நான் வட இந்திய பெண். தென்னிந்திய உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ரஜினியுடன், காலா படத்தில் நடித்த பின்தான், தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பின், தென்னிந்திய உணவுக்கு அடிமையாகி விட்டேன். வட இந்திய உணவுகள், பிடிக்காமல் போய்விட்டது. பட வாய்ப்புக்காக, வலைத்தளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கின்றனர். கவர்ச்சி படங்களை பார்த்து மட்டும் பட வாய்ப்புகள் வருவதில்லை. சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேண்டும் என்றார்.

மூலக்கதை