புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

புதுவை: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது தந்தை தனவேலுவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மீதும் முதலவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதால் கட்சியில் இருந்து தனவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து தனவேலுவின் மகன் அசோக் ஷிண்டேவை சஸ்பெண்ட் செய்ய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம் உத்தரவிட்டார்.

மூலக்கதை