வருவாரா பாண்ட்யா | ஜனவரி 18, 2020

தினமலர்  தினமலர்
வருவாரா பாண்ட்யா | ஜனவரி 18, 2020

பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. ஒரு நாள் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 5 ‘டுவென்டி–20’, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் 24ம் தேதி ஆக்லாந்தில் நடக்கவுள்ளது. ‘டுவென்டி–20’ தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது.

ஒரு நாள் அணிக்கு ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் (செப், 2019) பங்கேற்ற இவருக்கு, முதுகுப்பகுதியில் ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. பவுலிங் சோதனையில் தேர்ச்சி அடையாத காரணத்தால் நியூசிலாந்து ‘ஏ’ தொடரில் பங்கேற்கவில்லை.  பாண்ட்யா சிறப்பான உடற்தகுதி பெற்றால், மீண்டும் அணியில் வாய்ப்பு பெறலாம். இவர் இல்லாதபட்சத்தில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகலாம்.

ராகுல் வாய்ப்பு

டெஸ்ட் அணியை பொறுத்தவரை, லோகேஷ் ராகுல் இடம்பெற காத்திருக்கிறார். கடந்த விண்டீஸ் டெஸ்ட் தொடரில் (ஆக. 2019) விளையாடிய இவர், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் மிரட்டும் இவரை சேர்க்கும் எண்ணத்தில் கேப்டன் கோஹ்லி இருப்பதாக தெரிகிறது. வேகப்பந்துவீச்சாளர் சைனி அணியில் இணைந்தால், குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

மூலக்கதை