இன்று! போலியோ சொட்டு முகாம்:குட்டீசுக்கு மறக்காம கொடுங்க

தினமலர்  தினமலர்
இன்று! போலியோ சொட்டு முகாம்:குட்டீசுக்கு மறக்காம கொடுங்க

திருப்பூர்:இன்று, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் சொட்டு மருந்து அளிக்க முன்வர வேண்டும்.போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் மலத்தின் வழியாக பரவும் ஒருவகை தொற்றுநோய். இதனால், தசைநார் பலவீனம் அடைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.இந்த நோயை குணப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இருப்பினும், அதனை வராமல் தடுக்க முடியும். இதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்படுகிறது.தொடர்ச்சியாக மருத்து அளிக்கப்பட்டதன் பேரில், இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து, தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது. அதன்படி, இன்று, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், 2.27 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 13 ஒன்றியங்களில், 1,154 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மையங்களிலும், நான்கு பணியாளர்கள் வீதம், 4,922 பணியாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர, 26 நடமாடும் குழுக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில், 23 மையங்கள் அமைக்கப்பட்டு, சொட்டு மருந்து வழங்கவும் உள்ளது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'இன்று காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் சொட்டு மருந்து போட வேண்டும்,' என்றனர்.

மூலக்கதை