குடியுரிமை உரிமை மட்டுமல்ல பொதுமக்களின் சமூக கடமை: தலைமை நீதிபதி பேச்சு

தினகரன்  தினகரன்
குடியுரிமை உரிமை மட்டுமல்ல பொதுமக்களின் சமூக கடமை: தலைமை நீதிபதி பேச்சு

நாக்பூர்: மகாராஷ்டிராவின்  நாக்பூரில் உள்ள ராஷ்டிரசன்ட் துகாடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலையின் 107வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது: சில கல்வி நிறுவனங்கள் முற்றிலும் வர்த்தக நோக்கத்துடன் செயல்படுகின்றன. அறிவையும், பண்பையும் வளர்ப்பதுதான் கல்வியின் உண்மையான இலக்கு. சிறந்த குடிமகனாக இருக்க வேண்டிய பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது. குடியுரிமை என்பது உரிமைகள் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அதில் சமூகத்துக்கான கடமைகளும் உள்ளது என்றார்.

மூலக்கதை