பிஎஸ்எப் தேர்வு முறைகேடு சிபிஐ அதிரடி ரெய்டு

தினகரன்  தினகரன்
பிஎஸ்எப் தேர்வு முறைகேடு சிபிஐ அதிரடி ரெய்டு

புதுடெல்லி: உபி.யில் எல்லை பாதுகாப்பு படையின் மத்திய தொழில் பாதுகாப்புப்  படைக்கான காவலர் எழுத்து தேர்வு அண்மையில் நடந்தது. இதன் விடைத்தாள் திருத்தும் பணியில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உபி.யின் காஜியாபாத்தின் முராட் நகரைச் சேர்ந்த ரவி குமார், பட்பர்கான்ஞ் தொழிற்பேட்டையில் உள்ள சி.எஸ். டேட்டாமேஷன் என்ற தனியார் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இதுதொடர்பாக, டெல்லி, காஜியாபாத், குர்கிராம் ஆகிய பகுதிகளில் சில அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மூலக்கதை