‘இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் பொறுக்கமாட்டோம்’ராகுலுக்கு அமித்ஷா கடும் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
‘இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் பொறுக்கமாட்டோம்’ராகுலுக்கு அமித்ஷா கடும் எச்சரிக்கை

ஹுப்பள்ளி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  ஆதரவாக பெங்களூருவில் நேற்று பாஜ சார்பில் நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பாஜ  தேசிய தலைவருமான அமித்ஷா பேசியதாவது:இந்தியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள்  இருக்கக்கூடாது என காங்கிரசார் எதிர்க்கின்றனர். அப்படியென்றால்  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்துக்கள் மட்டும்  இன்றி சிறுபான்மையினர் தங்க வைக்கப்பட்டுள்ளதை காங்கிரசார் ஏன்  எதிர்க்கவில்லை?.அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழையும்  வெளிநாட்டினரை தங்க வைக்கவே அகதிகள் முகாம் அமைக்கப்படுள்ளது. ஆனால்  தேவையின்றி முகாம்களில் தங்கியுள்ளவர்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில்  உள்ள இஸ்லாமியரை காங்கிரசார் திசைத்திருப்ப முயற்சிக்கின்றனர். மத்திய  அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது வெளிநாட்டில் வசிக்கும்  சிறுபான்மையினரை பாதுகாக்கவே என்பதை இங்கு ளிவுபடுத்துகிறேன்.  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் 30  சதவிகிமாக இருந்தனர். ஆனால், இன்று 3 சதவிகிதமாக குறைந்துள்ளனர். 10 ஆண்டுகள் இந்தியாவில் பாஜ ஆட்சி செய்தால் ஒட்டுமொத்த  தீவிரவாதத்தையும் ஒழிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். எல்லை  விவகாரத்தில் இந்தியாவுடன் மோதி வரும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி  கொடுத்து வருகிறார். ராகுல்காந்தி எதையோ பேசவேண்டும் என்று நினைத்தால், பாஜவுக்கு  எதிராக கோஷம் போடட்டும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்,  இந்தியாவுக்கு எதிராக ேகாஷமிடும் ராகுல்காந்தியின் நடவடிக்கையை நாங்கள்  ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என எச்சரிக்கிறேன் என்றார்.இதற்கிடையே, பொதுக்கூட்டம் நடந்த நேரு மைதானத்தின் அருகில் கருப்பு பலூன்களில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதி பறக்கவிட்டனர். அதை தொடர்ந்து ஹுப்பள்ளி நீதிமன்றம் எதிரில் சிஏஏக்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை