21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ரஷ்மிகாவுக்கு ஐ.டி. அதிகாரிகள் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ரஷ்மிகாவுக்கு ஐ.டி. அதிகாரிகள் நோட்டீஸ்

பெங்களூரு: நடிகை  ரஷ்மிகாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கன்னடம்,  தமிழ், தெலுங்கு, இந்தி என பல ெமாழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை  ரஷ்மிகா. கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் உள்ள இவரது வீட்டில் மூன்று  தினங்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது பல ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர்.இதையடுத்து  நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி  ரஷ்மிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில்,  ‘‘ரஷ்மிகா வீட்டில் நடந்த சோதனை யில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும். எனவே, நாளை மறுநாள் 21ம் தேதி நடிகை ரஷ்மிகா மற்றும் அவரது குடும்பத்தார் நேரில்  ஆஜராக வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை