காஷ்மீர் டிஎஸ்பி வழக்கு என்ஐஏ.யிடம் ஒப்படைப்பு

தினகரன்  தினகரன்
காஷ்மீர் டிஎஸ்பி வழக்கு என்ஐஏ.யிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் டிஎஸ்பி தவிந்தர் சிங்கின் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றினால், அது கிடப்பில் போடப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை சேர்ந்த நவீத் பாபு, அடிப், வக்கீல் இர்பான் மிர் உள்ளிட்ட மூன்று பேர் காஷ்மீரில் இருந்து தப்புவதற்கு உதவிய டிஎஸ்பி தவிந்தர் சிங் வழக்கை என்ஐஏ விசாரிக்க இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், `மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும், என்ஐஏ இந்த வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கும்,’ என்று கூறினார்.

மூலக்கதை