சாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்

தினகரன்  தினகரன்
சாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்

மும்பை: நடிகை ஷபானா ஆஸ்மியும் அவரது கணவரும் கவிஞருமான ஜாவேத் அக்தரும் நேற்று மும்பையில் இருந்து காரில் புனேக்கு சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே விரைவு சாலையில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகே மாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கார் முன்னால் சென்ற ஒரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. லாரியின் பின்பக்கமும் சேதமடைந்தது.இந்த விபத்தில் ஷபானா ஆஸ்மி காயமடைந்தார். அவரது கணவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ஷபானா ஆஸ்மியை மீட்டு நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ராய்கட் போலீஸ் எஸ்.பி. கூறினார்.

மூலக்கதை