தொடரை வெல்வது யார்? பெங்களூருவில் இன்று இந்தியா - ஆஸி. மல்லுக்கட்டு

தினகரன்  தினகரன்
தொடரை வெல்வது யார்? பெங்களூருவில் இன்று இந்தியா  ஆஸி. மல்லுக்கட்டு

பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்ற நிலையி, ராஜ்கோட்டில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது. .கடந்த ஆண்டு இந்தியா வந்து விளையாடிய ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளதால், இம்முறையும் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க, கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அந்த தோல்விக்கு பழிதீர்க்க வரிந்துகட்டுகிறது. எனவே, சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், தவான், ராகுல், ஷ்ரேயாஸ், மணிஷ், கேதார், ஷிவம் துபே, ஜடேஜா, சாஹல், குல்தீப், சைனி, பூம்ரா, தாகூர், ஷமி.ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), வார்னர், கேரி, கம்மின்ஸ், அபாட், ஏகார், ஹேண்ட்ஸ்கோம்ப், ஹேசல்வுட், ஸ்மித், லாபுஷேன், ரிச்சர்ட்சன், ஸ்டார்க், டர்னர், ஸம்பா.

மூலக்கதை