ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை: நாமல் ராஜபக்சே

தினமலர்  தினமலர்
ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை: நாமல் ராஜபக்சே

இலங்கை வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான விக்னேஷ்வரன், சமீபத்தில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நடந்த அந்த சந்திப்பின்போது, ரஜினியை இலங்கை வந்து அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் காணுமாறு அழைப்பு விடுத்தார்.

ரஜினி விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதால், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வந்து தமிழ் மக்கள் சந்தித்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்று ரஜினிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை இலங்கை அரசு மறுத்தது.

இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே அளித்த ஒரு பேட்டியில், ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை. அவருக்கு விசா வழங்க மறுத்ததாக வெளியான செய்தி வதந்தி என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை