முதல் ஹிந்திப்படம்: கீர்த்தி சுரேஷ் விலகல்?

தினமலர்  தினமலர்
முதல் ஹிந்திப்படம்: கீர்த்தி சுரேஷ் விலகல்?

மகாநடி படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றவர் கீர்த்தி சுரேஷ். ஏனோ அதன்பிறகு அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும் மைதான் படம் மூலம் ஹிந்தியில் கால்பதித்தார் கீர்த்தி சுரேஷ். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்காக உடல் எடையையும் கணிசமாக குறைத்தார் கீர்த்தி. இந்நிலையில் அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் கொடுத்த கால்ஷீட்டில் படப்பிடிப்பு துவங்கப்படாததாலும், தற்போது வேறு சில படங்களில் அவர் நடிக்க இருப்பதாலும் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை