மகேஷ்பாபு - விஜயசாந்தி திருப்பதியில் சாமி தரிசனம்

தினமலர்  தினமலர்
மகேஷ்பாபு  விஜயசாந்தி திருப்பதியில் சாமி தரிசனம்

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து திரைக்கு வந்துள்ள படம் சாரிலேரு நீகேவரு. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்தபடத்தில் விஜயசாந்தி ஒரு பேராசிரியராக நடித்துள்ளார். அனில்ரவிபுடி இயக்கிய இப்படம் கடந்த 11ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை காலை மகேஷ்பாபு, விஜயசாந்தி உள்பட படக்குழுவினர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூலக்கதை