ஜானு பற்றி சர்வானந்த்

தினமலர்  தினமலர்
ஜானு பற்றி சர்வானந்த்

விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த 96 படத்தை, தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் பிரேம்குமார். சர்வானந்த் - சமந்தா நடித்துள்ள அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. த்ரிஷா போன்று சமந்தா நடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. ‛‛நான் எனது பாணியில் நடித்துள்ளேன். இன்னொருவரின் நடிப்புடன் என்னை ஒப்பிட வேண்டாம்'' என சமந்தா வேண்டுகோள் வைத்தார்.

இப்படம் பற்றி சர்வானந்த் கூறுகையில், சமந்தாவின் நடிப்பு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. இன்றைய சமகாலத்து நடிகைகளில் சமந்தாவை ஒரு சிறந்த நடிகையாக பார்க்கிறேன். எனக்கும் அவருக்குமான நடிப்பு நன்றாக வந்துள்ளது. இருவரும் அந்த கதாபாத்திரங்களோடு முழுமையாக வாழ்ந்தோம். படம் திரைக்கு வரும்போது அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்கிறார்.

மூலக்கதை