தர்பார் : ஹிந்தியில் படுதோல்வி

தினமலர்  தினமலர்
தர்பார் : ஹிந்தியில் படுதோல்வி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'தர்பார்'. தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியான இப்படம் இரண்டாவது வாரத்தில் உலகம் முழுக்க 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. தென்னிந்தியாவில் வரவேற்பை பெற்ற இப்படம் ஹிந்தியில் படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு வெளியான இந்தனை நாட்களில் மொத்தமாக ரூ.5.5 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியை தவிர்த்து இத்தனைக்கும் முருகதாஸ் அங்கு பிரபலமான இயக்குனர். மேலும் வில்லனாக நடித்துள்ள சுனில் ஷெட்டியும் ஹிந்தி ரசிகர்களுக்கு பரீட்சயம். அப்படியிருந்தும் படம் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தப்படம் பற்றி பெரிய அளவில் மக்களிடம் புரொமோஷன் செய்யப்படாததும் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள். மேலும் ஹிந்தியில் வெளியாகி உள்ள அஜய் தேவ்கனின் ‛தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள்.

மூலக்கதை