சிஏஏ உள்ளிட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஆந்திரா, டெல்லி போலீசுக்கு கூடுதல் அதிகாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிஏஏ உள்ளிட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஆந்திரா, டெல்லி போலீசுக்கு கூடுதல் அதிகாரம்

* என்எஸ்ஏ சட்டத்தில் உடனடியாக கைது செய்ய முடியும்
* 3 மாதங்களுக்கு மட்டும் அதிகாரமளித்து உத்தரவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை ஒடுக்கும் வகையில், ஆந்திரா, டெல்லி போலீசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வழிவகை அதிகாரம் வழங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு மட்டும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் போராட்டம் நடந்தாலும்கூட டெல்லியில்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) எதிர்ப்பு போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. டெல்லியில் தினமும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

ஒரு பக்கம் ஷாகின் பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் சிஏஏ எதிர்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரைத் தடுத்து வைக்கும் ஓர் அதிகாரத்தை டெல்லி போலீஸ் கமிஷனருக்கு வழங்கி ஒரு அறிவிப்பின்படி வெளியிட்டுள்ளார். அதன்படி, தனிநபர் ஒருவர் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக போலீசாரால் கண்டறியப்பட்டால், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி (என்எஸ்ஏ) பல மாதங்கள் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க முடியும்.தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980-இன் பிரிவு 2-இன் பிரிவு (சி) உடன் பிரிவு 3-இன் துணைப்பிரிவு (3)-ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, ஜன. 19 முதல் ஏப்.

18ம் தேதி வரையிலான 3 மாத காலகட்டம் வரை போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி போலீஸ் கமிஷனர் மேற்கண்ட சட்டத்தின் 3வது பிரிவின் துணைப்பிரிவு (2)-இன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கடந்த 10ம் தேதி முதல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக தலைநகர் டெல்லியில் தற்போது போலீஸ் கமிஷனருக்கு அளிக்கப்பட்ட கூடுதல் அதிகாரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

அதாவது, போராட்டக்களத்தில் உள்ள சிலரை கைது செய்து அவர்களை பல மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க முடியும்

.

மூலக்கதை