மகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்

அகமத் நகர்: மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் உள்ள பாத்ரியில் இருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது. பர்பானியில் ரூ.100 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இது தொடர்பாக விவாதிக்க கிராமத்தினர் கூட்டம் ஒருங்கிணைக்கப்படும் என்று சாய்பாபா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஷீரடி வரும் பக்தர்களுக்கு இதனால் எந்த சிரமமும் ஏற்படாது எனவும் சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை