அணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

தினகரன்  தினகரன்
அணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

வாஷிங்டன்: அணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்களை சட்டவிரோதமாக திருடியதாக 5 பாகிஸ்தானியர்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஜான் சி டெமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன், ஹாங்காங், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமகன்கள் 5 பேர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாமல் அமெரிக்க தொழில்நுட்பத்தை அனுப்ப துணை போனதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை மீறி தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ஜான் சி டெமர்ஸ் கூறியுள்ளார். 38 முறை அமெரிக்காவில் இருந்து ராணுவம் பயன்படுத்தும் கருவிகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அதே நேரத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு அணுஆயுத தொழில்நுட்பத்தை வடகொரியா, ஈரான், லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்ததாக பாகிஸ்தானின் விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 1980-ம் ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்கும் பலம் பெற்ற நாடாக மாறிய பாகிஸ்தான், அணுஆயுத பரவல் தடை சட்டத்தை மீறி நட்பு நாடுகளுக்கு உதவியது பின்னரே தெரியவந்தது.

மூலக்கதை