விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்

தினமலர்  தினமலர்
விவசாயியாக வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி: லக்ஷ்மண்

கோமாளி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் 'பூமி' திரைப்படம் மே 1ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் பூமி திரைப்படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப் படங்களை இயக்கிய லஷ்மண், இந்தப் படத்தையும் இயக்குகிறார். நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் 2020, மே 1ல், தொழிலாளர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமி படத்தில் விவசாயியாக நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என்பதை விட, அவர் ஒரு விவசாயியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் என, படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் வெளியான பின் படத்தின் இயக்குநர் லக்ஷண் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை