ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 341 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தவான் 96 ரன்களும், கேஎல் ராகுல் 80 ரன்களும், கேப்டன் விராத் கோலி 78 ரன்களும், ரோஹித் சர்மா 42 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் சம்பா 3 விக்கெட், ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட் வீழ்த்தினர்.ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 98 ரன்கள், லபுஸ்சாக்னே 46 ரன்கள், அகர் 25 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் முகமது சமி 3, சைனி 2, ஜடேஜா 2, குல்தீப் யாதவ் 2, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது. இப்போது இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளது.தோல்வியில் இருந்து சட்டென்று மீள்வது இந்தியாவுக்கு புதிதல்ல. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடர்கள் அதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் ஆஸ்திரேலியாவும், ஒருப்போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா வென்ற 4 போட்டிகளும் இந்திய மண்ணில் நடந்த போட்டிகள். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

மூலக்கதை