சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

TAMIL CNN  TAMIL CNN
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தொகை இந்த வருடத்தில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரிய தூதுவர் லியோன்லி தெரிவித்துள்ளார். குச்சவெளி சுற்றுலா வலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 5.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன் கீழ் வழங்கப்படவுள்ளது. மாத்தளை எடன் வல சமூக சேவை சுற்றுலா கிராம அபிவிருத்தி திட்டத்திற்காகவும் 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது. The post சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை