அமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில் வெஸ்ட் கார்பீல்ட் பார் அருகே உள்ள முடிவெட்டும் கடையில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, கடையின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக 2 மர்ம நபர்கள் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர்.  தரையில் படுத்து பதுங்கினர். இருப்பினும், இந்த  துப்பாக்கிச்சூட்டில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மூலக்கதை