ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ் - 400 ஏவுகணை தயாரிப்பு துவங்கியது: 2025ல் ஒப்படைக்கப்படும்

தினகரன்  தினகரன்
ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ்  400 ஏவுகணை தயாரிப்பு துவங்கியது: 2025ல் ஒப்படைக்கப்படும்

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா  வாங்க    உள்ள எஸ்-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்பு தொடங்கி விட்டது. நாட்டின் வான் வெளி பாதுகாப்புக்காக  ரஷ்யாவிடம் இருந்து மிகவும் அதிநவீனமான  எஸ்-400 ஏவுகணைகளை வாங்கஇந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்த ஏவுகணைகள் வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும், இந்த ஏவுகணைகளை தயாரிக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் இந்த திட்டத்தின் ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் டெல்லியில் நேற்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா- ரஷ்யா- சீனா நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் மார்ச் மாதம் 22, 23ம் தேதிகளில் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதில்  இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்லை. இது தொடர்பாக சந்தேகம் இருப்பவர்கள் அங்கு செல்லலாம்,’’ என்றார்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘‘காஷ்மீர் விவகாரம் முற்றிலும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் அடிப்படையில், இந்தியா- பாகிஸ்தான் நாடுகளை சார்ந்தது. அதில், 3ம் நாடுகள் தலையிட முடியாது,’’ என்றார்.

மூலக்கதை