ரோகித் சர்மா ‘7000’ | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா ‘7000’ | ஜனவரி 17, 2020

 ராஜ்கோட்: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது. 

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த ரிஷாப் பன்டுக்குப் பதில் மணிஷ் பாண்டே இடம் பெற்றார். ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. 

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. இதில் ரோகித் சர்மா, 13 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்த முதல் துவக்க வீரர் ஆனார். இவர் 137 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, 147 இன்னிங்சில் 7000 ரன்கள் எடுத்திருந்தார்.

160 இன்னிங்சில் இந்த ரன்களை எடுத்த இந்தியாவின் சச்சின், மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் தில்ஷன் (165 இன்னிங்ஸ்), இந்தியாவின் கங்குலி (168) 4, 5வது இடங்களில் உள்ளனர்.

மூலக்கதை