சஞ்சு சாம்சனின் ‘கமா’ | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
சஞ்சு சாம்சனின் ‘கமா’ | ஜனவரி 17, 2020

திருவனந்தபுரம்: இந்திய அணியில் தேர்வு பெற முடியாத விரக்தியில், சஞ்சு சாம்சன் வெளியிட்ட ‘டுவிட்டருக்கு’ பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்திய அணி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 25. கடந்த 2015, ஜூலை 19ல் ஜிம்பாப்வேக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் அறிமுகம் ஆனார். சுமார் ஐந்து ஆண்டுக்குப் பின், சமீபத்திய இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ ல் வாய்ப்பு பெற்றார்.

வரும் நியூசிலாந்து தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். தவிர, மும்பை போட்டியில் காயமடைந்த ரிஷாப் பன்டுக்குப் பதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் ஆந்திராவின் விக்கெட் கீப்பர் பரத் 26, சேர்க்கப்பட்டார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த சஞ்சு சாம்சன் நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ கமா (,)’ என மட்டும் பதிவிட்டர். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத விரக்தியில் பல்வேறு பொருள் தரும் வகையில் வெளியான இந்த ‘டுவீட்டை’ சுமார் 12,000 பேர் ‘லைக்’ செய்ய, 1500 பேர் ‘ரீ டுவீட்’ செய்தனர்.

கடந்த உலக கோப்பை தொடரின் போது அணியில் தேர்வு செய்யப்படாத விரக்தியில் இருந்த அம்பதி ராயுவு,‘3 டி’ கண்ணாடி வாங்கப் போவதாக’ விமர்சித்து இருந்தார். இந்த வரிசையில் சஞ்சு சாம்சனின் ‘கமா’ இணைந்துள்ளது.

மூலக்கதை