பாபு நத்கர்னி மரணம் | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
பாபு நத்கர்னி மரணம் | ஜனவரி 17, 2020

மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாபு நத்கர்னி மும்பையில் காலமானார்.

முன்னாள் இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ பாபு நத்கர்னி 86. இடது கை பேட்ஸ்மேன், இடது கை சுழற்பந்துவீச்சாளரான இவர், இந்தியாவுக்காக 41 டெஸ்டில் 1414 ரன்கள், 88 விக்கெட் சாய்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 ‘மெய்டன் ஓவர்’ வீசி சாதனை படைத்துள்ளார். மும்பை, மஹாராஷ்டிரா அணிகளுக்காக 191 முதல் தர போட்டிகளில் (8880 ரன்கள், 500 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.

பாபு நத்கர்னி வயது முதிர்வு காரணமாக நேற்று மும்பையில் காலமானார். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

மூலக்கதை