வோடபோனின் பலவீனம் ஏர்டெல், ஜியோவுக்கு லாபம்

தினமலர்  தினமலர்
வோடபோனின் பலவீனம் ஏர்டெல், ஜியோவுக்கு லாபம்

புதுடில்லி: வோடபோன் ஐடியா நிறுவனத்தின், போட்டி போடும் திறன் பலவீனமடையக் கூடும் என, ‘மூடிஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களிடமிருந்து, 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வசூலிக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.இந்நிலையில், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நிதிப் பளு காரணமாக, வோடபோனின் போட்டித் திறன் குறையும் என, மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மூடிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஏர்டெல் நிறுவனம், 35 ஆயிரத்து, 586 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், தேவையான நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டது.ஆனால், வோடபோன் நிறுவனம், 53 ஆயிரத்து, 38 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த பளு காரணமாக, அதன் போட்டி திறன் பலகீனம் அடையும்.இது, போட்டி நிறுவனங்களான, ஏர்டெல், ஜியோ ஆகியவற்றுக்கு சந்தை பங்கை அதிகம் பெற்றுத் தருவதற்கான வாய்ப்பாக அமையும்.இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை