ரிலையன்ஸ் நிகர லாபம் 13.5 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ரிலையன்ஸ் நிகர லாபம் 13.5 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 13.5 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து, 640 கோடி ரூபாயாக, உயர்ந்துள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 10 ஆயிரத்து, 251 கோடி ரூபாயாக இருந்தது.நிகர லாபம் அதிகரித்திருப்பினும், ஒருங்கிணைந்த வருவாய், 1.4 சதவீதம் குறைந்து, 1.69 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில், வருவாய், 1.71 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம், மதிப்பீட்டு காலத்தில், 1,350 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக, அதன் சில்லரை விற்பனை மற்றும் தொலை தொடர்பு வணிகங்கள் அமைந்துள்ளன.

மூலக்கதை