பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா.,

தினமலர்  தினமலர்
பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா.,

புதுடில்லி: இந்தியாவின், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை, குறைத்து அறிவித்துள்ளது,

ஐ.நா.,இது குறித்து, ஐ.நா.,வின், ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2020’ எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அடுத்த நிதியாண்டின் ஆரம்பத்தில், வளர்ச்சி விகிதம், 6.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேக்கமடையும்உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும். புவிசார் அரசியல் உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும், 1.8 சதவீதமாக குறையும்.தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, ஐந்து நாடுகளில் ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் தேக்கமடையும் அல்லது வீழ்ச்சியடையும்.

அதேசமயம், 2020ல், தனிநபர், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 4 சதவீதத்தை தாண்டக்கூடிய நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2019ல் வளர்ச்சி, 2.2 சதவீதத்திலிருந்து, 1.7 சதவீதமாக குறையும்.ஐரோப்பிய ஒன்றியத்தில், தனியார் நுகர்வு வளர்ச்சியால், 2019ல் வளர்ச்சி, 1.4 சதவீதத்திலிருந்து, 1.6 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.சீனாவின் வளர்ச்சி, 2019ல், 6.1 சதவீதமாகவும்; 2020ல், 6 சதவீதமாகவும்; 2021ல், 5.9 சதவீதமாகவும் இருக்கும். முன்னுரிமைஉலகளாவிய பொருளாதார சமநிலை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளிலிருந்து சீனா, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதால், உலகளாவிய பொருளாதார முடிவெடுக்கும் சக்தியும் இடம் மாறுகிறது

.கொள்கைகளை வகுக்கும் இடத்தில் இருப்பவர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.இதற்கு கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களில், முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை