கடலோரப்பகுதிகளில் நாளை மழை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடலோரப்பகுதிகளில் நாளை மழை

சென்னை: தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நாளை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் நாளை மழை பெய்யும்.

இப்பகுதிகளில்  19, 20ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவும். அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சில இடங்களில் அதிகாலை  நேரங்களில் மூடுபனி பெய்யும். வெயிலின் அளவு 21 - 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இதேநிலையே அடுத்த 48 மணிநேரத்திற்கும் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை