டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாஜக

தினகரன்  தினகரன்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாஜக

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பெயரை டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி அறிவித்தார். 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லியில் முதல் கட்டமாக 57 தொகுதிக்கான வேட்பாளர்களை பாஜக மாநில தலைவர் வெளியிட்டது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.இதனால் சில நாட்களுக்கு முன்னதாக டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி மாதம் 8-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் எனவும், அதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்கிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் எஸ்.சி. வகுப்பை சேர்ந்த 11 பேரும், 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் மாடல் டவுன் தொகுதியில் கபில் மிஷ்ரா, ரோகிணி தொகுதியில் விஜேந்தர் குப்தா, ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தா, சாந்தினி சவுக் தொகுதியில் சுமன் குமார் குப்தா உள்ளிட்ட 57 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை