இந்திய அணி பேட்டிங் | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
இந்திய அணி பேட்டிங் | ஜனவரி 17, 2020

\ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், கோஹ்லி, லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தனர். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்தது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது. 

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த ரிஷாப் பன்டுக்குப் பதில் மணிஷ் பாண்டே இடம் பெற்றார். ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. 

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது ரோகித் சர்மா (42) அவுட்டானார். ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். இவர் 96 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன் எடுக்க, கேப்டன் கோஹ்லி 78 ரன்னுக்கு கிளம்பினார். மணிஷ் பாண்டே (2) வந்த வேகத்தில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோகேஷ் ராகுல், 38வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 80 ரன்னுக்கு ரன் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்தது. ஜடேஜா (20), முகமது ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

 

மூலக்கதை