திருமுல்லைவாயலில் ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமுல்லைவாயலில் ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அம்பத்தூர் ஏரிக்குள் ஒரு மூதாட்டி மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் எஸ்ஐ சீதாலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.விசாரணையில், ஆவடி அடுத்த  அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ரவியின் மனைவி ரேவதி (58) என்பவர் ஏரிக்குள் மூழ்கி இறந்தது தெரியவந்தது. மேலும்,  இவர் சமீபத்தில் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்ததால் இடது கை எலும்பு முறிவினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் எலும்பு  முறிவின் வேதனை தாங்காமல் ஏரிக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் மர்ம மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை