ஊத்துக்கோட்டை, எல்லாபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊத்துக்கோட்டை, எல்லாபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அதிமுக சார்பில், இன்று காலை ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்த  நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.   பின்னர் நடைபெற்ற விழாவுக்கு அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார்.

பேரூர் செயலாளர் ஷேக்தாவூது, முன்னாள், இந்நாள்  கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சக்திவேல், அண்ணாதுரை, பிரஸ் மணி, மோகன்பாபு, செல்வராஜ், முகம்மது சித்திக், சுப்பிரமணி, புலவர் நடராஜன்,  அம்பலவாணன் ஆகியோர் முன்னிலையில் குழந்தைகள் மற்றும் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதேபோல், பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று எல்லாபுரம் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் தலைமையில் துணை தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் ராஜிவ் காந்தி, ராஜசேகர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் அம்மினி மகேந்திரன் ஆகியோர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி, அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி
னர்.   மேலும் தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம், பெரியபாளையம், வெங்கல் என 53 ஊராட்சிகளிலும், அந்தந்த பகுதி அதிமுக  நிர்வாகிகளால் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

.

மூலக்கதை