நொளம்பூரில் காவல் நிலையத்தில் தெருநாய்கள் தஞ்சம்: மக்கள் அச்சம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நொளம்பூரில் காவல் நிலையத்தில் தெருநாய்கள் தஞ்சம்: மக்கள் அச்சம்

அண்ணாநகர்:  நொளம்பூர் காவல் நிலையத்தில் தெருநாய்கள் தஞ்சமடைந்து உள்ளன. அவற்றுக்கு அங்குள்ள ஆய்வாளர் ஆதரவளிப்பதால், அங்கு மக்கள் புகார்  கொடுக்க வருவதற்கு அஞ்சுகின்றனர். சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தின் கீழ்தளத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு, முதல் தளத்தில் குற்றப்பிரிவு இயங்கி வருகிறது.

இங்கு 6  தெருநாய்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. மேலும், இங்கு புகார் கொடுக்க வரும் மக்களை துரத்தி சென்று கடிக்க வருகின்றன.

இதனால் இங்கு  பெண்கள் வருவதற்கே அஞ்சுகின்றனர். மேலும், அவை காவல் நிலையத்துக்குள் ஒன்றோடொன்று சண்டை போட்டு கொள்கின்றன.

புகார் கொடுக்க வருபவர்கள் அமரும் நாற்காலிகளில்  அசுத்தம் செய்கின்றன. இந்த தெருநாய்களை அங்கு பொறுப்பில் இருக்கும் ஆய்வாளர் ஆதரவளித்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் தெருநாய்கள் உலாவுவது, மக்களை கடிக்க வருவது குறித்து யாரேனும் புகார் கொடுத்தால், அவர்களை ஆய்வாளர் விரட்டி  அனுப்புகிறார்.

இதனால் அங்கு புகார் அளிக்க செல்லும் மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். எனவே, நொளம்பூர் காவல் நிலையத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட  காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை