பஜாஜ், ‘சேட்டக்’ மின்சார ஸ்கூட்டர்

தினமலர்  தினமலர்
பஜாஜ், ‘சேட்டக்’ மின்சார ஸ்கூட்டர்

புது­டில்லி: ‘பஜாஜ் ஆட்டோ’ நிறு­வ­னத்­தின் புகழ் பெற்ற, பஜாஜ், ‘சேட்­டக்’ ஸ்கூட்­டர், இப்­போது மின்­சார ஸ்கூட்­ட­ராக, புதிய அவ­தா­ரம் எடுத்து சந்­தைக்கு வந்­துள்­ளது.இதன் ஆரம்ப விலை, 1 லட்­சம் ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

பஜாஜ் சேட்­டக் மின்­சார ஸ்கூட்­டர்­கள், அர்­பன் மற்­றும் பிரீ­மி­யம் என இரு மாடல்­களில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்ளன. இதில், அர்­பன் மாடல் விலை, 1 லட்சம் ரூபாய்; பிரீ­மி­யம் மாடல் விலை, 1.5 லட்­சம் ரூபாய். முதற்­கட்­ட­மாக, இந்த வாக­னங்­கள், பெங்­க­ளூரு மற்­றும் புனே நக­ரங்­களில் விற்­ப­னைக்கு வந்­துள்ளன.

கே.டி.எம்., நிறு­வ­னத்­தின், ‘புரோ பைக்­கிங்’ டீலர்­கள் வாயி­லாக, புனே மற்­றும் பெங்­க­ளூரு நக­ரங்­களில் விற்­ப­னைக்கு கிடைக்க துவங்­கி­யுள்­ளது, இந்த ஸ்கூட்­டர்­கள். மேலும் இந்­ந­க­ரங்­க­ளி­லுள்ள வாடிக்­கை­யா­ளர்­கள், இந்த மின்­சார ஸ்கூட்­டரை, 2,000 ரூபாய் கட்­ட­ண­மாக செலுத்தி, முன்­ப­திவு செய்­து­ கொள்­ள­லாம். பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து டெலி­வரி செய்­யப்­படும். இவ்­வாறு பஜாஜ் ஆட்டோ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

மூலக்கதை