‘அமேசான்’ முதலீட்டுக்கு பியுஷ் கோயல் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
‘அமேசான்’ முதலீட்டுக்கு பியுஷ் கோயல் எதிர்ப்பு

புது­டில்லி: ‘அமேசான்’ நிறு­வ­னம், 100 கோடி டாலர் முத­லீடு செய்­வ­தன் மூலம், இந்­தி­யா­வுக்கு எந்த சகா­ய­மும் செய்­ய­வில்லை என, மத்­திய வர்த்­தக துறை அமைச்­சர் பியுஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில், அமே­சான் தலைமை செயல் அதி­காரி ஜெப் பெசோஸ், இந்­தி­யா­வில் சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­களை, ‘டிஜிட்­டல்’ மய­மாக்­கு­வ­தற்­காக, 100 கோடி டாலர் முத­லீடு செய்ய இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இது குறித்து, மத்­திய வர்த்­தக துறை அமைச்­சர் பியுஷ் கோயல் கூறி­ய­தா­வது:அமே­சான், 100 கோடி டாலரை முத­லீடு செய்­ய­லாம். ஆனால், அவர்­கள் ஒவ்­வொரு ஆண்­டும், 100 கோடி டாலர் நஷ்­டத்தை சந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது, யார் அதற்கு நிதி­யு­தவி செய்­வது?

இந்­தியா, ‘மல்டி பிராண்டு’ சில்­லரை விற்­ப­னை­யில், 49 சத­வீ­த­துக்கு மேலாக அன்­னிய முத­லீ­டு­களை அனு­ம­திப்­ப­தில்லை. மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், இந்­திய சட்­டங்­களை பின்­பற்ற வேண்­டும். ஓட்­டை­களை கண்­டு­பி­டித்து, பின்­பக்க வாசல் வழி­யாக, மல்டி பிராண்டு சில்­லரை பிரி­வில் நுழை­யக்­கூ­டாது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை