ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்

ஹோபர்ட் : சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா - நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா(33) 2017ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு ஓய்வில் இருந்தார்.  இந்நிலையில் 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும்  சனியா களம் இறங்கினார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில்  இந்தியாவின் சானியா மிர்சா,  உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடி வருகிறார். அங்கு நேற்று நடைப்பெற்ற காலிறுதிப் போட்டியில் இந்த ஜோடி, அமெரிக்காவின் வனியா கிங்/கிறிஸ்டீனா மெக்ஹலே ஜோடியுடன் மோதியது. இந்த 2 ஜோடிகளும் தலா ஒரு செட்டை கைப்பற்றின. தொடர்ந்து 3-வது செட்டில் சானியா மிர்சா/நடியா கிச்சனோக் இணை டை பிரேக்கரில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தியது. அதனால் 6-2, 4-6, 10-4 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் சானியா மிர்சா/நடியா 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸிடான் செக் - பவுஸ்கோவாவை வீழ்த்தியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாங் சுவாய் - பெங்க் சுவோ இணையை சானியா ஜோடி எதிர்கொள்கிறது.

மூலக்கதை