இந்தியா-சீனா இடையே எல்லையே இல்லையா? டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி

தினகரன்  தினகரன்
இந்தியாசீனா இடையே எல்லையே இல்லையா? டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி

வாஷிங்டன்: ‘இந்தியா - சீனா இடையே எல்லையே இல்லை,’ என்று கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அளித்துள்ளார். புலிட்சர் விருது பெற்ற அமெரிக்க பத்திரிக்கையாளர்களான பிலிப் ராக்கர், கரோல் டி லியோனிங் ஆகியோர், “மிகவும் நிலையான மேதை” என்ற தலைப்பில் அதிபர் டிரம்ப் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். அதில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் 3 ஆண்டுகளில் அவரது குழப்பம் நிறைந்த பேச்சுக்கள், அறியாமை தொடர்பான சுவாரசியமான சம்பவங்க விவரிக்கப்பட்டு உள்ளன.இதில்,  அதிபர் டிரம்ப் - மோடி சந்திப்பு குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது டிரம்ப், ‘இந்தியாவின் வலது பக்கத்தில் சீனா இருந்த போதிலும், இருநாடுகளுக்கும் இடையே எல்லைகள் இல்லையா?’ என மோடியிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு மோடி ஆச்சரியம் அடைந்தார். இது அவரது முக மாற்றத்திலேயே உணர முடிந்தது. அதிர்ச்சி அடைந்த பின்பு மோடி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என புத்தக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவும், சீனாவும் 3,488 கிமீ எல்லையை கொண்டுள்ளன. மேலும், உலகத்திலேயே இருநாடுகளும் 9வது மிக நீளமான எல்லையை கொண்டுள்ளன. இது அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான 3,141 கிமீ.யை விட அதிகமாகும். ஆனால், இந்த சந்திப்பு எந்த ஆண்டு நடந்தது என்பது குறித்து புத்தகத்தில் கூறப்படவில்லை. இந்தியா, சீனா எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இந்த எல்லை பிரச்னையால் இருநாடுகளுக்கும் இடையே போரும் நடந்துள்ளது. ஆனால், இது எல்லாம் தெரியாமல் டிரம்ப் பேசியது பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

மூலக்கதை