ஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை

தினகரன்  தினகரன்
ஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி இரையாகாமல்,. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தையை டைனோசர் கால மரங்களை ரகசிய நடவடிக்கை மூலமாக அரசு பாதுகாத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ‘டைனோசர் மரங்கள்’ என அழைக்கப்படும் வொல்லெமி பைன் மரங்கள் உள்ளன. இப்படிப்பட்ட ஒரு மரம் இருக்கிறது என்பது, புதைபடிவங்களில் இருந்துதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை 20 கோடி ஆண்டுகளுக்கு முன் காணப்பட்டவை. அதாவது, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவை. அதனால்தான், இவை டைனோசர் கால மரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக காட்டுத் தீ ஏற்பட்டு, 10 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியை சாம்பலாக்கி இருக்கிறது. பல ஆயிரம் வீடுகளையும் அழித்து விட்டது. இந்த காட்டுத் தீ பரவியுள்ள சிட்டினியின் ப்ளு மவுண்ட் மலைப் பகுதியில் 200 டைனோசர் கால மரங்கள் இருப்பது. கடந்த 1994ம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது முதல், இந்த மரங்கள் சிறப்பு கவனம் செலுத்தி, பலத்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காட்டுத்தீயில் இந்த மரங்கள் அழிந்து போகாமல் தடுக்க, ஆஸ்திரேலிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து காப்பாற்றி இருக்கிறது. இந்த மரங்கள் இருக்கும் பகுதியை காட்டுத் தீ நெருங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் மரங்களை சுற்றி பெரிய பள்ளங்களை வெட்டி, மரங்கள் இருக்கும் இடத்தை சுற்றி நீரையும் அகழி போல் சேமித்தனர். இதனால், அப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.* தீயை கட்டுப்படுத்திய மழைஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமானதுதான். ஆனால், அந்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டுதான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஆஸி. அரசு பல ஆயிரம் கோடிகளை வாரி இறைத்து விட்டது. ஆனாலும், 30 இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத்தீ எரிந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வந்துள்ளது.

மூலக்கதை