சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களுக்காக 184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக மனித உரிமை தகவல்

தினகரன்  தினகரன்
சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களுக்காக 184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக மனித உரிமை தகவல்

அமீரகம்: சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களுக்காக 184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ரிப்ரீவ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ரிப்ரீவ் தெரிவித்துள்ளது.இதில் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் ஒரே நாளில் 37 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்றும் அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் என்றும் ரிப்ரீவ் அமைப்பு தெரிவித்துள்ளது. சவுதிஅரேபியாவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதில்லை என கூறப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை