இலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது குறித்து விளக்கினேன்...:நாராயணசாமி பேட்டி

தினகரன்  தினகரன்
இலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது குறித்து விளக்கினேன்...:நாராயணசாமி பேட்டி

டெல்லி: இலங்கை கடற்படை தமிழக, புதுவை மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது குறித்து விளக்கினேன் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். இந்திய கடற்படை ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் ராஜ்நாத்திடம் கோரிக்கை வைத்தேன். மேலும் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புதுச்சேரி நிதி, நிர்வாக விவகாரம் குறித்து மனு அளித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை